இந்த வருடத்திற்கான சர்வதேச நீர் மாநாடு 2023 டிசம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நீர் மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மையத்தில் (ஊநுறுயுளு) நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு தொடர்பாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
நீடித்து நிற்கும் அபிவிருத்தி இலக்கின் கீழ், மக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரம் என்பவற்றை அனைவருக்கும் வழங்குதல், இதனை அடைவதற்கு நாட்டின் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் பல்வேறு சிரமங்களுக்கும் முகம் கொடுத்தோம்.
இந்த சவாலை அடைவதற்கு தேவையான புதிய விடயங்கள், பொது மக்களின் பங்களிப்பு, மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றை எவ்வாறு உள்ளடக்குவது போன்ற விடயங்கள் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளன.
இம் மாநாடு இரண்டு நாட்களைக் கொண்டது. இம்மாநாட்டின் பிரதம அதிதியாக, பௌரவ பிரதமர் மற்றும்;, உலக வங்கியின் சார்பாக (றழசடன டியமெ றயவநச படழடியட னசைநஉவழச) சரோஜ் குமார் ஜா அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இவர் இலங்கையின் நீர் வளத்திற்கு பல உதவிகளையும் செய்துள்ளார்.
இதுவரையிலும் இந்த நீர் வழங்கல் துறையைப் பயன்படுத்தி, அரசியல் மயமாக்கி பல்வேறு விடயங்களை மேற்கொள்ள முடியுமான தருனத்தில் கூட அநேகமானோர் அதனை கைவிட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் ஒரு நிலையான திட்டம் கொண்ட பொறிமுறையொன்றை கொண்டு வந்தால், கட்டாயமாக இலங்கை வாழ் கசல மக்களுக்கும் எங்களால் நீரை வழங்க முடியும். இந்த மாநாட்டின் மூலம் நாம் எதிர்பார்ப்பதும் இதுவாகும்.
அத்துடன், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஊடாக பல்வேறு மறுசீரமைப்புக்களை கொண்டுவந்துள்ளோம். எனவே அதற்காக உங்கள் அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலமாக நாட்டிற்கு கட்டாயமாக பொருளாதார பாலத்தையும் nதிர்பார்க்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.