2020, 2021, 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் எதோ ஒரு விதத்தில் கருணைக் கிழங்கு, வற்றாளை மற்றும் மரவள்ளி ஆகிய கிழங்கு வகைகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை என விவசாயத் திணைக்களத்தின் சமூகப் பொருளாதார மற்றும் திட்டமிடல் மத்திய நிலையத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 295 மில்லியன் டொலர் செலவில் நாட்டிற்கு காய்கறிகள் மற்றும் பழவகைகள் விசேடமாக கருணைக் கிழங்கு, மரவள்ளி மற்றும் வற்றாளை ஆகிய கிழங்குகளை ஏற்றுமதி செய்துள்ளதாக பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பாக விவசாய அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
அதற்கிணங்க அந்தக் காரணங்கள் தொடர்பாக உடனடியாக விவசாய அமைச்சிற்கு அறிக்கையொன்று வழங்குமாறும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் விவசாயத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அக்காரணத்திற்கு ஏற்றதாக விவசாயத் திணைக்களத்தின் சமூகப் பொருளாதார மற்றும் திட்டமிடல் மத்திய நிலையத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த 04ஆம் திகதி விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, நாட்டில் சம்பந்தப்பட்ட மூன்று வருட காலத்தினுள் கருணைக் கிழங்கு, வற்றாளை மற்றும் மரவள்ளி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க 2022ஆம் வருடத்தில் மரவள்ளி 1203 மெற்றிக் தொன், கருணைக் கிழங்கு 04 மெற்றிக் தொன் மற்றும் வற்றாளை 81 மெற்றிக் தொன் எடை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கருணைக் கிழங்கு ஏற்றுமதி ஊடாக 2020ஆம் வருடத்தில் ஒரு மில்லியன் ரூபா மற்றும் 2022 ஆம் ஆண்டில் 02 மில்லியன் ரூபா அத்துடன் 03 மில்லியன் ரூபா என வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
வற்றாளை ஏற்றுமதியினால் 2020ஆம் ஆண்டில் 36மில்லிய் ரூபாவும், 2021இல் 50மில்லியன் ரூபா மற்றும் 2022ஆம் ஆண்டில் 82மில்லியன் ரூபாய் என வருமானம் பெறப்பட்டுள்ளது.
அத்துடன் மரவள்ளிக் கிழங்கு எற்றுமதியினால் கடந்த மூன்று வருடங்களில் முறையே 650 மில்லியன் ரூபா, 698மில்லியன் ரூபா மற்றும் 1203 மில்லியன் ரூபா என இலாபம் கிடைத்துள்ளது.
இவற்றுடன் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் அது சோஸ், பழச்சாறு மற்றும் ஏனைய உற்பத்தி வடிவிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனினும் தக்காளி ஏற்றுமதி 2020இல் 67 மெற்றிக் தொன், 2021 இல் 88மெற்றிக் தொன் மற்றும் 2022 இல் 76 மெற்றிக் தொன் எடையில் சர்வதேச சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவ்வாறே காய்கறிகளின் விதைகள் 2020இல் 1955 மெற்றிக் தொன், 2021இல் 1701 மெற்றிக் தொன் மற்றும் 2022 இல் 2363 மெற்றிக் தொன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சுங்கத் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள தரவுகளின் படி 2023.01.01 இலிருந்து 2023.11.22 வரையான காலப்பகுதியில் நாட்டில் கருணைக் கிழங்கு, வற்றாளை அல்லது மரவள்ளி என எதுவும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகக் காணப்படவில்லை.
விவாசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் ஊடாக உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய சகலவற்றையும் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கிணங்க எதிர்காலத்தில் காலநிலை இடையூறுகள் இன்மை காணப்படின் நாட்டிற்கு அவசியமான பயிரினங்களை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு அவசியமான சகல வேலைத் திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.