பெங்களூரு : விமான நிலையம் செல்வதற்காக, பெங்களூரு சிட்டியிலிருந்து புறப்பட்ட ரயில், 11ம் தேதி முதல் பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். ஆனால், யஷ்வந்த்பூரிலிருந்து புறப்படும் ரயிலில் மாற்றமில்லை. தேவனஹள்ளி வரை சென்ற இரு ரயில்களும் சிக்கபல்லாபூர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலையம் செல்லும் பயணியருக்காக, பெங்களூரு சிட்டி, யஷ்வந்த்பூரில் இருந்து தேவனஹள்ளி வரை ‘மெமு’ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
அறிக்கை
இந்நிலையில், தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 11ம் தேதி முதல், ரயில் எண் 06531 பெங்களூரு சிட்டி – தேவனஹள்ளி ரயில், இனிமேல் கன்டோன்மென்டில் இருந்து புறப்படும். சிக்கபல்லாபூர் ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரயில் 06532: தேவனஹள்ளி – பெங்களூரு சிட்டி ரயில், இனிமேல் சிக்கபல்லாபூரில் இருந்து புறப்பட்டு கன்டோமென்டில் நிறுத்தப்படும்.
எண் 06535: தேவனஹள்ளி – கன்டோன்மென்ட் ரயில், இனி சிக்கபல்லாபூரில் இருந்து புறப்பட்டு, கன்டோன்மென்ட் வரை இயக்கப்படும்.
எண் 06538: கன்டோன்மென்ட் – தேவனஹள்ளி ரயில், இனி கன்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு சிக்கபல்லாபூர் வரை நீட்டிக்குப்பட்டுள்ளது.
எண் 06593: யஷ்வந்த்பூர் – தேவனஹள்ளி ரயில், இனி சிக்கபல்லாபூர் வரையிலும்;
எண் 06594: தேவனஹள்ளி – யஷ்வந்த்பூர் ரயில், இனி யஷ்வந்த்பூர் – சிக்கபல்லாபூர் வரை ‘மெமு’ ரயில்கள் இயக்கப்படும்.
l ரயில் எண்கள் 06531 / 06532 பெங்களூரு கன்டோன்மென்ட் – சிக்கபல்லாபூர் – பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில், கன்டோன்மென்டில் இருந்து தினமும் அதிகாலை 5:10 மணிக்கு புறப்பட்டு, 6:55 மணிக்கு சிக்கபல்லாபூர் சென்றடையும்; மறு மார்க்கத்தில், மாலை 6:30 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:00 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தடையும்.
l ரயில் எண் 06535 சிக்கபல்லாபூர் – கன்டோன்மென்ட் ரயில், தினமும் சிக்கபல்லபூரில் இருந்து காலை 8:20 மணிக்கு புறப்பட்டு, 10:40 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தடையும்.
l ரயில் எண் 06538 பெங்களூரு கன்டோன்மென்ட் – சிக்கபல்லாபூர் ரயில், தினமும் கன்டோன்மென்டில் இருந்து மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு சிக்கபல்லாபூர் சென்றடையும்.
l ரயில் எண் 06593 / 06594 யஷ்வந்த்பூர் – சிக்கபல்லாபூர் – யஷ்வந்த்பூர் ரயில், யஷ்வந்த்பூரில் இருந்து காலை 10:10 மணிக்கு புறப்பட்டு, 11:40 மணிக்கு சிக்கபல்லாபூர் சென்றடையும். மறு மார்க்கத்தில் சிக்கபல்லாபூரில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு, 2:50 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.
ரத்து
ரயில் எண்: 06533 தேவனஹள்ளி – எலஹங்கா; எண் 06534 எலஹங்கா – கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய ரயில் நிலையம்; எண் 06539 / 06540 தேவனஹள்ளி – எலஹங்கா – தேவனஹள்ளி ஆகிய ரயில்கள் வரும் 11ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்