'கம்பீர் சொன்ன தகாத வார்த்தை' களத்தில் சண்டை போட்ட ஸ்ரீசாந்த் – பரபரப்பு வீடியோ!

Gambhir Sreesanth Issue Video: ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள், அனுபவ வீரர்கள் என பல்வேறு நாட்டினர் இணைந்து விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ராஞ்சி, டேராடூன், ஜம்மு, விசாகப்பட்டினம், சூரத் உள்ளிட்ட நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற்றன. கடந்த நவ. 18ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி நாளை மறுநாளுடன் (டிச. 9) நிறைவு பெறுகிறது. 

மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற நிலையில், அர்பனைஸர்ஸ் ஹைதராபாத், மணிபால் டைகர்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் உள்ளிட்ட நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ், பில்வாரா கிங்ஸ் அணிகள் தகுதிச்சுற்றோடு வெளியேறின.

கெயிலின் வெறியாட்டம் வீண்

ஐபிஎல் பாணியில் குவாலிபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் குவாலிபயர் போட்டியில், சுரேஷ் ரெய்னா தலைமையிலான ஹைதராபாத் அணி, முகமது கைப் தலைமையிலான மணிபால் டைகர்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு சென்றது. மணிபால் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு சென்றது. இந்நிலையில், எலிமினேட்டர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிடல்ஸ் அணியும், பார்தீவ் படேல் தலைமையிலான குஜராத் அணியும் நேற்று சூரத்தில் மோதின. 

இதில், இந்தியா கேப்பிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதிபெற்றது. இதில் இந்தியா கேபிடல்ஸ் அணி முதலில் விளையாடி 223 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கம்பீர் 51 (30) ரன்களை அடித்தார். கெவின் பீட்டர்சன், ரிகார்டோ பாவெல், பென் டன்க், பாரத் சிப்லி ஆகியோரும் குறைந்த பந்துகளில் ரன்களை குவித்தனர். குஜராத் பந்துவீச்சில் ராயத் எம்ரிட் 2 விக்கெட்டுகளையும், ஸ்ரீசாந்த், சரப்ஜிட் லாடா, சீக்குகே பிரசன்னா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

Heated conversation between Gautam Gambhir and S Sreesanth in the LLC. pic.twitter.com/Cjl99SWAWK

— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 7, 2023

போட்டியில் பரபரப்பு 

ஆனால், இலக்கை துரத்திய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியால் 211 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கெயில் 84 ரன்களையும், கெவின் ஓ பிரையன் 57 ரன்களையும் எடுத்தாலும் மற்றவர்கள் பெரியளவில் விளையாடாததால் குஜராத் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

6… 4… Showdown! Watch till the end for Gambhir Sreesanth.
.
.#LegendsOnFanCode @llct20 pic.twitter.com/SDaIw1LXZP

— FanCode (@FanCode) December 6, 2023

இந்த போட்டியில் கௌதம் கம்பீருக்கும், பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்ரீசாந்த் ஓவரில் தொடர்ந்து, சிக்ஸரையும், பவுண்டரியையும் கம்பீர் அடித்தார். அப்போது, ஸ்ரீசாந்த் அவரை வம்புக்கு இழுத்ததாக தெரிந்தது. அதன்பின், ஓவர் முடிந்த பின்னர் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன்பின், கம்பீர் தலைமையிலான இந்திய கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றாலும், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

ஸ்ரீசாந்த் வெளியிட்ட வீடியோ

கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் இருவரும் சர்ச்சைக்கு பேர் போனவர்கள். கம்பீர் பல வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். கடந்த ஐபிஎல் தொடரில் கூட விராட் கோலியுடன் அவர் மோதலில் ஈடுபட்டார். ஸ்ரீசாந்த் ஹர்பஜனிடம் வாக்குவாதம் செய்தது, சூதாட்ட சர்ச்சை என புகார்கள் இருந்தாலும் தற்சமயம் அனைத்தில் இருந்தும் ஒதுங்கியிருந்ததாக தெரிந்தது.

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by SREE SANTH (@sreesanthnair36)

இந்நிலையில், ஸ்ரீசாந்த் கம்பீர் உடன் ஏற்பட்ட மோதல் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஸ்ரீசாந்த் அந்த வீடியோவில்,”Mr. Fighter (கௌதம் கம்பீர்) உடன் என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எப்போதும் தனது சக வீரர்கள் அனைவருடனும் சண்டையிடுபவர் அவர். எந்த காரணமும் இல்லாமல் சண்டையிடுவார், விரு பாய் (சேவாக்) உட்பட தனது சொந்த நாட்டின் மூத்த வீரர்களைக் கூட அவர் மதிக்கவில்லை. அதுதான் இன்றும் நடந்தது. எதுவுமில்லை. ஆத்திரமூட்டும் வகையில், அவர் என்னை மிகவும் முரட்டுத்தனமான வகையில் பேசினார், அதை கௌதம் கம்பீர் சொல்லியிருக்கக் கூடாது.

உங்கள் சொந்த சக ஊழியர்களை மதிக்கவில்லை என்றால், மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் என்ன பயன் இருக்கிறது? ஒளிபரப்பில் கூட விராட் பற்றி கேட்டால், அவர் அவரைப் பற்றி பேசுவதில்லை, வேறு எதையாவது பற்றி பேசுகிறார், நான் இன்னும் விரிவாக செல்ல விரும்பவில்லை. என் மனம் புண்பட்டுவிட்டது, என் குடும்பம் புண்பட்டுள்ளது, என் அன்பானவர்கள் புண்பட்டுள்ளனர் என்று சொல்ல விரும்புகிறேன். அவர் சொன்ன வார்த்தை… நான் ஒரு கெட்ட வார்த்தையோ, அவரை துஷ்பிரயோகம் செய்தோ எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை, அவர் வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் எப்போதும் செய்வதுதான் இது” என்றார். இந்த தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி இன்று சூரத்தில் நடைபெறுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.