நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தொல்லியல் மற்றும் தொல்பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொல்லியல் பெறுமதி வாய்ந்த விடயங்களில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் தொடர்பில் பாhளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதான எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தொல்பொருள் இடங்கள் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் பொதுமக்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலர் பிரச்சாரம் செய்தாலும் பாதுகாப்பு பணிகள் நிறுத்தப்பட மாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதில் அரசு எப்போதும் கவனம் செலுத்துகிறது. அந்த தொல்லியல் இடங்களை பிரயோசனம் இன்றி; வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை. அந்த இடங்களை மக்கள் பார்வைக்கு இடம் கொடுக்க வேண்டும், அதற்கான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், அதேபோன்று காட்சிப்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் பாதுகாக்க வேண்டும். யாரோ கூச்சலிட்டு போராட்டம் நடத்தினார்கள் என்பதற்காக அதனை நிறுத்த முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.