மிக்ஜாம் புயல் வெள்ளதால் பாதிக்கப்பட்ட வாகனங்ளுக்கு சிறப்பு முகாம்

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு ஆட்டோமொபைல் வாகன தயாரிப்பாளர்கள் சிறப்பு சர்வீஸ் முகாம் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளனர்.

மாருதி முதல் ஆடி வரை பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரா பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எந்த வாகனங்களையும் ஸ்டார்ட் செய்யவே கூடாது. முறையாக சோதனை செய்து நீரை வெளியேற்றிய பின்னரே ஸ்டார்ட் செய்ய வேண்டும்.

Cyclone Michaung Affected Cars and 2Wheelers

ஆடி இந்தியா நிறுவனம் சென்னையில் புயல் வெள்ளதால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு அனைத்து ஆடி கார்களுக்கும் 24 x 7 சாலையோர உதவி வழங்கப்படும். சாலையோர உதவி எண்கள் 1800-103-6800 அல்லது 1800-209-6800

ஹூண்டாய் இந்தியா தமிழ்நாடு அரசுக்கு 3 கோடி நிவாரனம் அறிவித்துள்ள நிலையில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவசர சாலை உதவிக் குழுவை அமைத்திருப்பதுடன் மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வாகனங்களின் காப்பீட்டுக் கோரிக்கைகளில் தேய்மானத் தொகையில் 50% தள்ளுபடியை வழங்கும்.

மேலும், அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை வருகையை எதிர்கொள்ளள இந்நிறுவனத்தின் சேவை மையங்கள் உயர் நிலையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உத்தரவாதம் மற்றும் சர்வீஸ் கால நீட்டிப்பு, பிரத்யேக அவசர சாலை உதவி குழு, 24×7 ஹெல்ப் டெஸ்க் மற்றும் இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்லும் உதவியை டிசம்பர் 31 வரை வழங்கும் என தெரிவித்துள்ளது.

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் மிக்ஜாம் புயல் பாதிப்புள்ள சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு அண்டை நகரங்களில் இருந்து 46 இழுவை டிரக்குகள் மற்றும் 34 சாலையோர உதவி வாகனங்கள் விரைவான சேவைக்கு தயார் நிலையில் உள்ளன. மாருதி சுஸுகியும் உதிரி பாகங்கள் இருப்பை அதிகரித்துள்ளதால் அவை எளிதில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மழை வெள்ளதால் பாதிப்படைந்த வாகனங்களுக்கு சாலையோர உதவி மற்றும் பல்வேறு சேவை சலுகைகளை அறிவித்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டுள்ள அறிக்கையில் ICE மற்றும் மின்சார வாகனங்கள் இரண்டிற்கும் காப்பீடு அல்லாத வெள்ளம் தொடர்பான பழுதுபார்ப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பழுது பார்க்க லேபர் கட்டணமாக இலவசமாக டிவிஎஸ் மோட்டார் வழங்க உள்ளது. இந்த சலுகை டிசம்பர் 8-18, 2023 வரை டிவிஎஸ் மோட்டார் மையத்திற்கு எடுத்துச் செல்லும் வசதியையும் வழங்கும்.

இந்த சேவை முகாமில் வெள்ளம் தொடர்பான ஏதேனும் சேதங்கள் மற்றும் உடனடி பழுதுபார்ப்பு தேவை ஆகியவற்றைக் கண்டறிய விரிவான வாகன சோதனையும் அடங்கும் என இந்நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், என்ஜின் சேதத்தைத் தவிர்க்க, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனத்தை எக்காரணம் கொண்டு ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் அறிவுறுத்தியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் இந்தியா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு முன்னுரிமை விரிவான சேவையை வழங்க மற்றும் உற்பத்தியாளர் சேவை மையங்களில் மனிதவளம் மற்றும் உதிரி பாகங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.