
வசூலை குவிக்கும் அனிமல் : ரன்பீர் கபூருக்கு முதல் ரூ.500 கோடி படம்
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, நடிகர் ரன்பீர் கபூர் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'அனிமல்'. ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 527.6 கோடி வரை வசூலித்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், 'ஏ' சான்றிதழ் பெற்ற படங்களில் இதுதான் அதிக வசூலித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல நடிகர் ரன்பீர் கபூருக்கு முதல் ரூ.500 கோடி வசூலை தந்த படமாக அனிமல் அமைந்துள்ளது.