Hero Vida & Ather – ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை ஏதெர் எனர்ஜி & ஹீரோ வீடா கூட்டணி

ஏதெர் எனர்ஜி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் வீடா ஆகிய இரு நிறுவனங்கள் 100க்கு மேற்பட்ட நகரங்களில் உள்ள 1900 ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை வீடா மற்றும் ஏதெர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என இரண்டும் பகிர்ந்து கொள்ள கூட்டணி அமைத்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்கனவே ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் முதலீடு செய்துள்ள நிலையில், கூடுதலாக ஏதெர் மற்றும் வீடா என இரு நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை பொதுவாக பகிர்ந்து கொள்ள உள்ளன.

Hero Vida and Ather Energy Fast Charger

1900 ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் முதல் BIS தரச்சான்றிதழ் அனுமதி பெற்ற LECCS தொழில்நுட்பத்தைப் கொண்டவை ஆகும்.

வாடிக்கையாளர்கள் ‘MY Vida’ மற்றும் ‘Ather App’ மூலம் சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிந்து அருகிலுள்ள சார்ஜிங் ஸ்டேஷனைக் கண்டறியவும், அதன் இருப்பை அறிய மற்றும் நிலையத்திற்குச் செல்லவும் உதவுகின்றது.

மொபிலிட்டி BU ஹீரோ மோட்டோகார்ப் தலைமை வணிக அதிகாரி டாக்டர். சுவதேஷ் ஸ்ரீவஸ்தவா கூட்டணி பற்றி கூறுகையில் வளர்ந்து வரும் ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் மூலம் ஏதர் எனர்ஜி உடன் எங்கள் தொடர்பை விரிவுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விடா பிராண்ட் வாக்குறுதியான “கவலை இல்லாத EV சுற்றுச்சூழல் அமைப்பை” உருவாக்குகிறது.

மேலும், நாட்டில் உள்ள இந்த மிகப்பெரிய சார்ஜிங் நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற & வசதியான உரிமை அனுபவத்தை வழங்குவதில் நீண்ட தூரம் செல்லும். வேகமாக வளர்ந்து வரும் இந்த நெட்வொர்க் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இணைப்பான் தரத்தைப் பயன்படுத்துகிறது.

இதனால் தற்போதைய மற்றும் வருங்கால வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களைப் பயன்படுத்தவும், எதிர்காலத்தில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் கட்டணம் வசூலிக்கவும் முடியும் என்பதை உறுதி செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

ather 450s escooter

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.