புதுடில்லி, உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் நகரின் வனப்பகுதியில் சமீபத்தில் இளைஞர் ஒருவரது சடலம் தலையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவரது பெயர் பங்கஜ் என்பது தெரியவந்தது.
பங்கஜின் தாயிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடைசியாக மனோஜ் குப்தா என்ற ஒப்பந்ததாரர், திருமணத்திற்கான சமையல் வேலைக்கு பங்கஜை அழைத்துச் சென்றதாக கூறினார்.
மனோஜ் குப்தாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரித்ததில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சமீபத்தில் காஜியாபாதில் நடந்த திருமண நிகழ்வில், உணவு பரிமாறும் பணியில் பங்கஜ் இருந்தார். அங்கு, எச்சில் தட்டுகளை எடுத்துச் சென்ற போது, விருந்தினர் ஒருவர் மீது அவை பட்டுள்ளன.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பானது.
ஒப்பந்ததாரர் மனோஜ் குப்தா உள்ளிட்ட சிலர், பங்கஜை கடுமையாக தாக்கியதுடன், துாக்கி தரையில் வீசியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, இறந்துவிட்டதாக பயந்து, அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து, பங்கஜை கொலை செய்ததற்காக மனோஜ் குப்தா, அமித் குமார் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement