Villain actor of Vijay film arrested for shooting youth | இளைஞரை சுட்டு கொன்ற விஜய் பட வில்லன் நடிகர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லக்னோ,உத்தர பிரதேசத்தில், ‘டிவி’ நடிகர் துப்பாக்கியால் சுட்டதில், இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞரின் குடும்பத்தை சேர்ந்த மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.

ஹிந்தி டிவி தொடர்களில் பிரபலமான நடிகர் புபேந்தர் சிங். இவர் நடிகர் விஜய் நடித்த பத்ரி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இவருக்கு உ.பி., யின் பிஜ்னோர் பகுதியில் பண்ணை தோட்டம் உள்ளது. இதன் அருகே குர்தீப் சிங் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில், புபேந்தர் சிங் தன் தோட்டத்தை சுற்றி முள்வேலி அமைக்க விரும்பி, அதற்காக அங்கிருந்த மரங்களை வெட்ட முயன்றார்.

இது தொடர்பாக புபேந்தர் மற்றும் குர்தீப் சிங் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது.

இதில் ஆத்திரம்அடைந்த நடிகர் புபேந்தர், தன் உதவியாளர்களுடன் சேர்ந்து, குர்தீப் சிங் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினார்.

மேலும், புபேந்தர் சிங் துப்பாக்கியால் சுட்டதில், குர்தீப்பின் மகன் கோவிந்த், 22, பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் குர்தீப், அவரது மற்றொரு மகன் அம்ரிக், மனைவி பீரா பாய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக நடிகர் புபேந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் ஜியான் சிங், ஜீவன் சிங், குர்ஜந்த் சிங் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.