சென்னை: பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ரா இன்று தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ரெஜினா, தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா கசாண்ட்ரா, ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
