மக்களவையில் அத்துமீறிய நபரிடம் பாஜக எம்.பி அளித்த விசிட்டர் பாஸ் – பின்புலம் என்ன?

புதுடெல்லி: மக்களவையில் இன்று (டிச.13) பாதுகாப்பு மீறல் நடந்துள்ள நிலையில், மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூரு மக்களவையின் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

மக்களவையில் இன்று (டிச.13) பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கைகளில் குதித்த சம்பவம் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் அவர்கள் கைகளில் புகை கக்கும் கருவி வைத்திருந்ததும், அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கும் பரிந்துரை கடிதம் அளித்த மக்களவை உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூரு மக்களவையின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் பெயர் சஹார் சர்மா, மனோரஞ்சன் என்று கண்டறியப்பட்டுள்ளது.

விசிட்டர்ஸ் பாஸ் வழங்கப்படுவது எப்படி? – நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் பார்வையாளராக உள்ளே செல்வதற்கு குறிப்பிட்ட எம்பியின் பரிந்துரை கடிதம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே நுழைவுச் சீட்டு வழங்கப்படும். அவர்களுக்கு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும் மேலும் அடையாள அட்டைகளை சரிபார்க்கப்படும் அதன்பிறகுதான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கும் பரிந்துரை கடிதம் அளித்த மக்களவை உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில், சஹார் சர்மா என்பவருக்கு மைசூரு மக்களவையின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரை கடிதம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஒருவருக்கு பரிந்துரை கடிதம் வழங்கிய மக்களவை உறுப்பினர் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இவர் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் என்றும், இவர் ஒரு பொறியாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

யார் இந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா? – 2014ல் அரசியலில் காலடி எடுத்து வைத்த அவர், விரைவிலே பாஜக இளைஞர் பிரிவு தலைவராக ஆனார். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மைசூர் தொகுதியில் போட்டியிட்டு, தனது போட்டி வேட்பாளரை விட 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இந்திய பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராகவும் உள்ளார். 2007-ல் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். இவரது மனைவி பெயர் அர்பிதா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சிம்ஹாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1,87,23,762 என்று ஓர் அறிக்கை கூறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.