
யஷ் அடுத்த படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன், சாய் பல்லவி
கேஜிஎப் படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் கன்னட நடிகர் யஷ். இவரின் 19வது படத்திற்கு 'டாக்சிக்' என தலைப்பு வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர். கே.வி.என் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். ஆக்ஷன் கலந்த படமாக உருவாகிறது. ஏற்கனவே இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இதில் கதாநாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன், சாய் பல்லவி இருவரும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மற்றொரு கதாநாயகி கதாபாத்திரத்திற்கு தேர்வு பணி நடைபெற்று வருகிறது.