6 போட்டியாளர்கள்… அனல் பறக்க போகும் 'சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்' பைனல் : டைட்டிலை வெல்ல போவது யார்?

தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சிங்கிங்ஷோ தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் இடத்தை பெற்றுள்ளது.

சரிகமப சீசன்3 ( சீனியர்ஸ் ) நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 மொத்தம் 28 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட்டை நடத்தி குழந்தைகளின் திறமையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று இந்த நிகழ்ச்சி, தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் என நான்கு பேர் இதுவரை பைனலுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற ப்ரீ ஸ்டைல் ரவுண்டு மூலமாக நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மொத்தம் 6 போட்டியாளர்களுடன் அனல் பறக்கும் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி வரும் 17-ம் தேதி மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நேரில் காண ஆசைப்படுபவர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச டிக்கெட்டுகளை பெற சென்னை கிண்டியில் உள்ள ஜீ தமிழ் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

நடுவர்களின் மதிப்பெண்கள் மட்டுமின்றி மிஸ்டு கால் மூலமாக மக்களின் ஓட்டுகளை வைத்து வெற்றியாளரை தேர்வு செய்யும் வகையில் இந்த கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

மொத்தம் 6 போட்டியாளர்களில் டைட்டிலுடன் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை தட்டி செல்ல போகும் போட்டியாளர் யார்? என்பதை தெரிந்து கொள்ள சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியினை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.