73-வது பிறந்தநாளையொட்டி ரஜினிக்கு ஆளுநர், முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது 73வதுபிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

நேற்று காலை முதல் போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். ரஜினி வீட்டில் இல்லாததால் அவரது உதவியாளர் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார். ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள்,திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை: தனது வெற்றிகரமான திரையுலக பயணத்தோடு, தூயஆன்மீக பயணத்தையும் அரவணைத்து, உலகளவில் 3 தலைமுறை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த உச்ச நட்சத்திரம் சகோதரர்ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: அன்பிற்கினிய நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்ச நட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தேக ஆரோக்கியத்துடனும், அளப்பரிய புகழோடும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்லஇறைவன் அருள் புரிவாராக.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தேசியவாதியும், பண்பாளருமான ரஜினிகாந்த் நல்லஉடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

இதேபோல், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சு.திருநாவுக்கரசர் எம்.பி., மக்கள் நீதி மய்யம் தலைவர்கமல்ஹாசன் உள்ளிட்டோரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.