RE Shotgun 650 debuts – ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ட்வீன் பைக் அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிதாக ஷாட்கன் 650 ட்வீன் பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பதிற்கு ஏற்ப கஸ்டமைஸ் வசதிகளை பெற்றதாக வந்துள்ளது.

ஏற்கனவே, மோட்டோவெர்ஸ் 2023 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிசனை தொடர்ந்து பொதுவான சந்தைக்கான மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.

Royal Enfield ShotGun 650 Twin

சந்தையில் உள்ள சூப்பர் மீட்டியோர் 650, இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள அதே  648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 Hp குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 RPM சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஷாட்கன் 650 பைக்கின் பரிமாணங்கள் 2,170 மிமீ நீளமாக இருக்கும், இது சூப்பர் மீட்டியோர் மாடலை விட 90 மிமீ குறைவாகவும், 70 மிமீ குறுகலாகவும், 50 மிமீ உயரம் குறைவாகவும், 35 மிமீ குறைந்த வீல்பேஸ் (1,465 மிமீ) கொண்டுள்ளது. மேலும், கர்ப் எடை சூப்பர் மீட்டியோர் 241 கிலோவை விட சற்றே குறைவாக இருக்கலாம்.

மொத்த வாகன எடை வகை ஒப்புதல் ஆவணத்தின்படி 428 கிலோவாகும் அதே நேரத்தில் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 15 லிட்டர் ஆகும்.

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ட்வீன் விலை ஜனவரி 2024-ல் அறிவிக்கப்படலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.