சென்னை பெரும்பாக்கம், கே.பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் அஜய்பாபு. இவரின் மனைவி ஜெயந்தி (32). இவர் மீது அரும்பாக்கம் காவல் நிலையத்தில் மூன்று திருட்டு வழக்குகளும் சூளைமேடு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. திருட்டு வழக்குகளில் கைதான ஜெயந்தி, புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டு வந்ததால் ஜெயந்தியை கடந்த 21.11.2023-ம் தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். அதனால் சிறையிலேயே ஜெயந்தி அடைக்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தார்.

இந்தநிலையில் கடந்த 13.12.2023-ம் தேதி புழல் பெண்கள் சிறையிலிருந்து ஜெயந்தி தப்பிச் சென்றார். இதுகுறித்து புழல் சிறை நிர்வாகம் தரப்பில் புழல் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட.து. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைதி ஜெயந்தியைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் ஜெயந்தி பெங்களூருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதனால் தனிப்படை போலீஸார் பெங்களூருவுக்குச் சென்றனர்.
பெங்களூர் கோவேன்பூர் நகர் அருகே உள்ள காட்டுப்பகுதியிலிருக்கும் ஜெயந்தியின் உறவினர் வீட்டில் அவர் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குச் சென்ற போலீஸார் ஜெயந்தியைப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து தப்பிய கைதி ஜெயந்தியை 48 மணி நேரத்தில் தனிப்படை போலீஸார் பிடித்தததையடுத்து அவர்களை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.