வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சுல்தான்பூர்: (உபி): மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த பேச்சு தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்., எம்.பி. ராகுல் நேரில் ஆஜராக கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜ., மூத்த தலைவராக இருந்த அமித்ஷா குறித்து ஆட்சேபிக்கத்தக்க கருத்தை காங். எம்.பி. ராகுல் , வெளியிட்டு பேசியதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான புகார் தொடர்பாக விசாரிக்கும் சுல்தான்பூரில் உள்ள கோர்ட்டில் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
பல கட்டங்களாக இழுத்தடிக்கப்பட்டு இந்தாண்டு நவம்பர் 18-ல் விசாரணைக்கு வந்த போது, நவ.27-ல் ஆஜராக வேண்டும் என ராகுலுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது. ஆனால் ராகுல் ஆஜராகவில்லை.தொடர்ந்து டிச.16 ம் தேதி (இன்று) ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றும் ராகுல் ஆஜராகாததால், வழக்கை இன்று விசாரணை நடத்திய நீதிபதி யோகேஷ் யாதவ், வரும் 2024 ஜன.06-ம் தேதி ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.
முன்னதாக மோடி குடும்ப பெயர் குறித்த அவதூறு பேச்சால் குஜராத் கோர்ட்டால் தண்டிக்கப் பட்டு எம்.பி. பதவியை பறிகொடுத்து மீண்டும் எம்.பி. பதவியை மீட்ட ராகுலுக்கு இது போன்ற அவதூறு வழக்கில் இனியும் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தால் சிக்கலாகி விடும் என்பதால் 2024 ஜன.06-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ராகுலுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement