சென்னை: நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் டிமான்ட்டி காலனி 2. இந்தப் படத்தின் டிரெயிலர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிகமான வியூஸ்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிமான்ட்டி காலனி 2 டீம் நிவாரண உதவி வழங்கியுள்ளது.
