திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று மாலை புறப்பட்ட செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு ஸ்ரீவைகுண்டம் வந்தபோது கடும்மழை காரணமாக நிறுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரயில்வே தண்டவாளத்தின் அடியில் இருந்த மணல் மற்றும் ஜல்லி கற்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் தண்டவாளம் மட்டும் அந்தரத்தில் தொங்கியதால் ரயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. 800 பயணிகள் பயணம் செய்த இந்த ரயில் நடுவழியில் கடும்மழையில் நிறுத்தப்பட்டதை அடுத்து […]
