
‛குட் நைட்' மணிகண்டன் புதிய பட அப்டேட்
குட் நைட் படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற பிறகு தற்போது 'லவ்வர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது அல்லாமல் இப்போது புதிய படம் ஒன்றில் மணிகண்டன் ஹீரோவாக நடிக்கிறார் என அறிவித்துள்ளனர்.
பிரபல யூடியூபர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் புதிய படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை சான்வி மேக்னா நடிக்கின்றார். இவர்களுடன் ஆர். சுந்தராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.