புதுச்சேரி:காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் உருவாக்கிய காய்கறி, மூலிகை தோட்டங்களை நடிகர் பார்த்திபன் பார்வையிட்டார்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். சிறை கைதிகள் மறு வாழ்வுக்காக, சிறை நிர்வாகம் மற்றும் அரபிந்தோ சொசைட்டி மூலம் கால்நடை வளர்ப்பு, தோட்டம் அமைத்தல், மூலிகை செடி வளர்ப்பு என ஏராளமான பணிகள் நடக்கிறது.
இதை அறிந்த நடிகர் பார்த்திபன் காலாப்பட்டு மத்திய சிறையை பார்வையிட வந்தார். சிறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் வரவேற்றார். தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், கண்காணிப்பாளர் பாஸ்கரன் சிறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு பணிகள் குறித்து விளக்கினர்.
சிறை தோட்டத்தை பார்வையிட்ட நடிகர் பார்த்திபன், சிறை நுாலகத்திற்கு புத்தகங்கள், கைதிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வாங்கி தருவதாக உறுதி அளித்து சென்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement