Ather Year end offers – 450X, 450S என எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.24,000 தள்ளுபடி வழங்கும் ஏதெர்

ஏதெர் எனர்ஜி வருடாந்திர முடிவை கொண்டாடும் வகையில் 450S  மற்றும் 450X என இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.24,000 வரை வழங்குகின்றது. பேட்டரிக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி ரூ.7,000 மதிப்புள்ளதாகும்.

இந்நிறுவனத்தின் மிக வேகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 450 அபெக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு ஜனவரி 2024லும் டெலிவரி மாரச் 2024 முதல் துவங்க உள்ளது.

Ather 450S and 450X year end offer

ஏதெர் எலக்ட்ரிக் டிசம்பர் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள சலுகை மூலம் மொத்தமாக ரூ.24,000 வரை தள்ளுபடி அளிக்கப்படுகின்றது. ரூ. 5,000 வரையிலான ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ. 1,500 வரையிலான கார்ப்பரேட் சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றது.

EMI முறையில் வாங்குபவர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களில் ரூ.12,000 வரை ரொக்க சேமிப்பு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டு EMI மூலம் ரூ.10,000 வரை கேஷ்பேக் பெறலாம்.

ரூ.7,000 மதிப்புள்ள பேட்டரி பேக்கிற்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆனது 450X 2.9kwh மற்றும் 450s புரோ பேக்குடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கூடுதலாக கிடைக்கும். மேலும் பொதுவாக வழங்கப்படுகின்ற 3 ஆண்டு அல்லது 30,000 கிமீ வாரண்டி உடன் ஒப்பிடுகையில் 5 ஆண்டுகள் அல்லது 60,000 கிமீ வரை உத்தரவாதத்தை அதிகரிக்கிறது.

ஏதெர் 450S & 450X விலை மற்றும் நுட்பவிபரங்கள்

ஏதெர் 450X 2.9kwh பேட்டரி திறன் பெற்ற மாடல் டாப் ஸ்பீடு 90Km/hr ஆகவும், இதன் ரேஞ்சு 111 கிமீ கொண்டதாக இருக்கும். 450S வேரியண்ட் 115 கிமீ ரேஞ்ச் வழங்குகின்றது.

450X 3.7kwh பேட்டரி வேரியண்டில் டாப் ஸ்பீடு 90Km/hr ஆகவும், இதன் ரேஞ்சு150 கிமீ கொண்டுள்ளது.

450S மற்றும் 450X (2.9kWh) க்கான சார்ஜிங் நேரம் 8 மணிநேரம் 36 நிமிடங்கள் ஆகும். அதே சமயம் 450X (3.7kWh) க்கு ஐந்து மணிநேரம் 45 நிமிடங்கள் ஆகும்.

Ather 450S – ₹ 1,29,949

Ather 450X 2.9 Kwh – ₹ 1,37,950

Ather 450X 3.7 Kwh – ₹ 1,44,871

(ex-showroom Chennai)

450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நான்கு ரைடிங் மோடுகளை பெற்று அவை SmartEco, Eco, Ride மற்றும் Sport. இதற்கிடையில், 450X ஸ்மார்ட் SmartEco, Eco, Ride, Sport, மற்றும் Wrap ஆகிய ஐந்து ரைடிங் மோடுகளைப் பெறுகிறது.

டிசம்பர் 31 வரை மட்டும் கிடைக்க உள்ள குறிப்பிடப்பட்ட சலுகை தொடர்பான மேலும் விபரங்கள் அறிய அருகாமையில் உள்ள ஏதெர் டீலரை அனுகலாம்.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.