சென்னை இன்று டி என் பி எஸ் சியி வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகத் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆண்டின் இறுதியில் வரும் ஆண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், எழுத்துத் தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. […]
