திருநள்ளாறு இன்று மாலை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குச் சனி பகவான் இடம் மாறியதால் திருநள்ளாற்றில் விழா நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் உள்ளது. இங்கு ஸ்ரீ சனீஸ்வரர் பகவான் கிழக்கு நோக்கித் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா இன்று மாலை 5.20 மணிக்கு இக்கோவிலில் நடைபெற்றது. இன்று மாலை, […]
