2023ம் ஆண்டு துரோணாச்சார்யா விருது மற்றும் அர்ஜுனா விருது பெறும் விளையாட்டு வீரர்கள்

புதுடெல்லி: 2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெறும் விளையாட்டு வீரர்களின் விவரங்கள் இன்று (டிச.20) மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. அதில் இந்தாண்டுக்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது பாட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Youth Affairs & Sports announced the National Sports Awards 2023 today. The awardees will receive their awards from the President at a specially organized function at Rashtrapati Bhavan on 9th January, 2024.

Major Dhyan Chand Khel Ratna Award 2023 will be given to… pic.twitter.com/mAbn85sAqY

— ANI (@ANI) December 20, 2023

ஆர்.வைஷாலி, முகமது ஷமி உள்ளிட்ட 26 வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத் துறை பயிற்சியாளர்கள் ஆர்.பி.ரமேஷ், லலித் குமார், மஹாவீர் பிரசாத், சிவேந்திர சிங் மற்றும் கணேஷ் பிரபாகர் ஆகிய ஐந்து பேருக்கு துரோணாச்சார்யா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மூன்று பயிற்சியாளர்களுக்கும், தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டுத் துறைக்கான விருதுகள் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி டெல்லியில் வழங்கப்படும்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தேசிய விளையாட்டு விருதுகளை வழங்குவார். 

அர்ஜுனா விருதுகள் 2023

Ojas Pravin Deotale – வில்வித்தை
அதிதி கோபிசந்த் சுவாமி – வில்வித்தை
ஸ்ரீசங்கர் எம் – தடகளம்
பருல் சவுத்ரி – தடகளம்
முகமது ஹுசாமுதீன் – குத்துச்சண்டை
ஆர் வைஷாலி – செஸ்
முகமது ஷமி – கிரிக்கெட்
அனுஷ் அகர்வாலா – குதிரையேற்றம்
திவ்யகிருதி சிங் – குதிரையேற்றம்
திக்ஷா டாகர் – கோல்ஃப்
கிரிஷன் பகதூர் பதக் – ஹாக்கி
புக்ரம்பம் சுசீலா சானு – ஹாக்கி
பவன் குமார் – கபடி
ரிது நேகி – கபடி
நஸ்ரீன் – கோ-கோ
பிங்கி – புல்வெளி கிண்ணங்கள்
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் – படப்பிடிப்பு
ஈஷா சிங் – படப்பிடிப்பு
ஹரிந்தர் பால் சிங் சந்து – ஸ்குவாஷ்
அய்ஹிகா முகர்ஜி – டேபிள் டென்னிஸ்
சுனில் குமார் – மல்யுத்தம்
அண்டிம் (Antim) – மல்யுத்தம்
நௌரெம் ரோஷிபினா தேவி – வுஷு
ஷீத்தல் தேவி – பாரா வில்வித்தை
இல்லூரி அஜய் குமார் ரெட்டி – பார்வையற்ற கிரிக்கெட்
பிராச்சி யாதவ் – பாரா கேனோயிங்

துரோணாச்சார்யா விருது 2023

லலித் குமார் – மல்யுத்தம்
ஆர்.பி.ரமேஷ் – செஸ்
மஹாவீர் பிரசாத் சைனி – பாரா தடகளம்
சிவேந்திர சிங் – ஹாக்கி
கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் – மல்லகாம்ப்

வாழ்நாள் விருதுகள்

ஜஸ்கிரத் சிங் கிரேவால் – கோல்ஃப்
பாஸ்கரன் இ – கபடி
ஜெயந்த குமார் புஷிலால் – டேபிள் டென்னிஸ்

வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தயான் சந்த் விருது 2023:

மஞ்சுஷா கன்வார் – பேட்மிண்டன்
வினீத் குமார் சர்மா – ஹாக்கி
கவிதா செல்வராஜ் – கபடி

மௌலானா அபுல் கலாம் ஆசாத் (MAKA) டிராபி 2023

குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ் – ஒட்டுமொத்த வெற்றியாளர் பல்கலைக்கழகம்
லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி, பஞ்சாப் – 1வது ரன்னர் அப் பல்கலைக்கழகம்
குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம், குருக்ஷேத்ரா – 2வது ரன்னர் அப் பல்கலைக்கழகம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.