கொச்சி, கேரளாவில் குறுக்கு வழியில் வீட்டிற்கு செல்ல முயன்று, கழுத்தளவு சேற்றில் சிக்கி ஐந்து மணி நேரமாக தவித்த மூதாட்டியை, தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
கேரள மாநிலம், கொச்சியின் மரடு பகுதியைச் சேர்ந்தவர் கமலாட்சி அம்மா, 76. வீட்டு வேலை செய்து வரும் இவர், நேற்று முன் தினம் காலை வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினார். சீக்கிரமாக செல்ல நினைத்து, குறுக்கு வழியில் சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆள் உயரம் ஆழம் உடைய சேற்றில் விழுந்தார். அதிலிருந்து வெளிவர முயன்று பார்த்தும் அவரால் முடியவில்லை. அருகே இருந்த மரக்கிளையை பிடித்தபடி, நீண்ட நேரமாக உதவிக்காக போராடினார்.
பிற்பகலில், துணிகளை காயப்போட மொட்டை மாடிக்கு வந்த பக்கத்து வீட்டு பெண், அருகே உள்ள சேற்றில் அசைவு தெரிவதை பார்த்து, அருகே சென்று பார்த்துள்ளார். மூதாட்டி ஒருவர் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஐந்து மணி நேரமாக சேற்றில் சிக்கியிருந்த கமலாட்சி அம்மாவை பத்திரமாக மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement