பிஜ்னோர்;உத்தர பிரதேசத்தில், சிறுத்தை தாக்கி ஒன்பது வயது சிறுமி உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேந்திரா. உ.பி., உ.பி., மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நஹ்தார் அருகே பதியோவாலா கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள கரும்புத் தோட்டத்தில் வேலை செய்கிறார்.
இவரது மகள் நைனா,9, நேற்று முன் தினம் தந்தையைப் பார்க்க தோட்டத்துக்கு சென்றாள். அப்போது, ஆற்றங்கரையில் மறைந்திருந்த சிறுத்தை, நைனா மீது பாய்ந்து கடித்துக் குதறியது. அங்கிருந்த மக்கள் அலறினர். இதையடுத்து சிறுத்தை காட்டுக்குள் ஓடியது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை தாம்பூர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நைனா உயிரிழந்தார். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement