குருகிராம்:திருடப்பட்ட மற்றும் பறிக்கப்பட்ட மொபைல் போன்களில் இருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, 2.75 கோடி ரூபாய் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஹரியானா மாநிலம், நுஹ் நகரில் வசிக்கும் ஜுபர் கான் மற்றும் வாசிம் ஆகிய இருவரும் பலரிடம் மொபைல் போன்களை பறித்துள்ளனர். அதேபோல, சிலரிடம் போன்களை திருடியுள்ளனர்.
அதில் சிலரது போன்களில் இருந்த ‘வீடியோ’க்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி 2.75 கோடி ரூபாய் வரை பறித்துள்ளனர்.
இதுகுறித்து வந்த புகார்களின் அடிப்படையில், 31வது செக்டார்- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஜூபர் கான் மற்றும் வாசிம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement