லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகிற புத்தாண்டையொட்டி வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே விஜய்யின் 68 வது படத்திற்கு Boss (or) Puzzle என டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் ஒன்றை தனது ‘x’ வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், “எல்லா அப்டேட்டுகளையும் பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி. வெங்கட் பிரபு ஸ்பெஷலான ஒன்றை தயார் செய்திருக்கிறார்.
Just saw all the updates. Thank you for the love ❤️ Keep calm and wait for the real one very soon @vp_offl is cooking something special. It is definitely not Boss or Puzzle Happy Morning everyone ❤️ #Thalapathy68
— Archana Kalpathi (@archanakalpathi) December 20, 2023
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். கூடிய விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும். ஆனால் தளபதி 68 படத்தின் டைட்டில் Boss (or) Puzzle கிடையாது” என்றுப் பதிவிட்டிருக்கிறார்.