முகமது சிராஜ் அப்செட்.. பும்ரா, சூர்யகுமார் போன்று ரியாக்ஷன் – 3 காரணங்களாக இருக்கலாம்..!

முகமது சிராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயம் உடைந்தது போன்ற சிமிலியை பகிர்ந்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை எழுப்பியுள்ளது. அவர் ஏன்? இப்படியான ஸ்டோரியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பும் நிலையில், அதன் பின்னணியில் 3 காரணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

முதல் காரணம் முகமது சமிக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது. அதில் இவருடைய பெயர் இடம்பெறவில்லை. தன்னுடைய பெயர் அர்ஜூனா விருதில் இல்லை என்ற வருத்தமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் விவகாரம். ரோகித் சர்மா திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன்ஷிப் கொடுப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே பலபேர் அதிருப்திகளை வெளிப்படுத்திவிட்டனர். மும்பை அணியிலேயே இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சமூக ஊடங்களில் இதேபோல் இதயம் உடைந்த சிமிலியைப் போட்டிருந்தனர். அவர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் அணுகுமுறை பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இவ்வளவு வெளிப்படையாக தெரிவதற்கு காரணம் சூர்யகுமாரின் மனைவி ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு வெளிப்படையாகவே தன்னுடைய அதிருப்தியை சோஷியல் மீடியாவில் கூறியிருந்தார். அந்த வரிசையில் இப்போது சிராஜூம் இணைந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இருப்பினும் இவ்வளவு லேட்டாவாக அதற்கு அவர் ரியாக்ட் செய்வார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. 

அதுவும் இல்லையென்றால் ஐபிஎல் ஏலத்தில் மற்ற பிளேயர்களுக்கு கிடைத்திருக்கும் தொகையை பார்த்து பிரம்மிப்பு அடைந்திருக்கிலாம். தனக்கு குறைவான தொகை மட்டுமே கிடைத்திருக்கிறது என அதிருப்தியில் இப்படி இதயம் உடைந்த சிமிலியை போட்டிருக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், மூன்று கருத்தும் யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இருப்பதால் முகமது சிராஜ் வெளிப்படையாக தெரிவிக்காத வரை இந்த யூகங்களையும் தவிர்ப்பதற்கில்லை.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.