
ராணாவின் பீரியட் படத்திற்கு இசையமைக்கும் கேஜிஎப் இசையமைப்பாளர்
தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர்களின் ஒருவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான இயக்குனர் தேஜா, நடிகர் ராணாவை வைத்து நேனே ராஜா நேனே மந்திரி என்கிற ஹிட் படத்தை சில வருடங்களுக்கு முன்பு கொடுத்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ராணாவை வைத்து ராட்சச ராஜா என்கிற புதிய படத்தை இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த படம் 1930களில் சென்னையில் நடைபெறுவது போன்று உருவாக்கப்பட இருக்கிறது. குறிப்பாக நிஜ சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குகிறார் தேஜா. இதற்கு கேஜிஎப், சலார் போன்று பீரியட் படங்களுக்கு இசையமைத்த அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர் ரவி பர்சூரை இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். சென்னையில் தான் பிறந்து வாழ்ந்த காலகட்டங்களில் கேள்விப்பட்ட நிஜமான கேங்ஸ்டர் கதைகளை தான் இந்த படத்தில் சொல்ல இருக்கிறாராம் இயக்குனர் தேஜா.