புதுடில்லி, ‘பிரதம மந்திரி பாரதீய ஜன் அவுஷதி பரியோஜனா’ என்னும் பிரதம மந்திரி மலிவு விலை மருந்து திட்டம் வாயிலாக மக்கள் மருந்தகங்களில் ‘ஜெனரிக்’ மருந்துகள் விற்கப்படுகின்றன.
பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் ‘பிராண்டட்’ மருந்துகளில் உள்ள மருத்துவ மூலப்பொருட்களை பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஜெனரிக்’ மருந்துகள் விற்பனை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:
பிரதம மந்திரி மலிவு விலை மருந்து திட்டத்தின் வாயிலாக, இந்த ஆண்டு, 1,000 கோடி ரூபாய்க்கு ஜெனரிக் மருந்துகள் விற்கப்பட்டுள்ளன. மலிவு விலை மருந்தகங்களில், பொதுமக்கள் மருந்து வாங்கியதால் இந்த ஆண்டு மட்டும், 5,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டு களில் 25,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ல், 80 ஆக இருந்த மருந்தகங்கள், தற்போது 100 மடங்குக்கு மேல் அதிகரித்து 10,000 ஆக உயர்ந்துள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement