சபரிமலை:கூடுதல் விலை கேட்டு சர்க்கரை அனுப்புவதை குத்தகைதாரர் நிறுத்தியதை தொடர்ந்து சபரிமலையில் அப்பம் ,அரவணை பிரசாதம் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அப்பம், அரவணை. இது தயாரிப்பதற்காக 20 லட்சம் கிலோ சர்க்கரை கிலோ ஒன்றுக்கு 42 ரூபாய் 90 பைசாவுக்கு வழங்க மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் தேவசம்போர்டு ஒப்பந்தம் செய்தது.
காலநிலை மாற்றங்கள் காரணமாக கரும்பு உற்பத்தி குறைந்து வெளி மார்க்கெட்டுகளில் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ சர்க்கரைக்கு 47 ரூபாய் வேண்டும் என்று கேட்டு சர்க்கரை அனுப்புவதை அந்த தனியார் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
இது உடனடியாக பிரசாதம் தயாரிப்பு பணியை பாதிக்காவிட்டாலும் மகர விளக்கு சீசனில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அந்த ஏஜன்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை தேவசம் போர்டு தொடங்கிய நிலையில், ஏஜன்சியின் பிரதிநிதிகள் தேவசம்போர்டு அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement