கட்சிரோலி,மஹாராஷ்டிரா – சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ள கட்சிரோலி மாவட்டத்தின் ஹிதுர் டோடூர் கிராமத்தை, கோயர்கோடி பகுதியுடன் இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அங்கு வந்த நக்சலைட்கள், சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்திய டேங்கர் மற்றும் மண் அள்ளும் இயந்திரத்தை தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றனர். அரசுக்கு எதிரான துண்டு பிரசுரத்தையும் அவர்கள் வீசி சென்றனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement