வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: கேரள கவர்னர் சென்ற கார் முன்பாக மாணவர் அமைப்பினர் இன்று கறுப்பு கொடி காண்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கிடையே, தனக்கு எதிராக செயல்படும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான. எஸ்.எப்.ஐ., எனப்படும் இந்திய மாணவர் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முதல்வர் ஆதரிப்பதாக, கவர்னர் ஆரிப் குற்றஞ்சாட்டியிருந்தார்.சமீபத்தில் கோழிக்கோடு பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னருக்கு, இந்திய மாணவர் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று இரவு கவர்னர் ஆரிப் முகமது கான், திருவனந்தபுரத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எஸ்.எப்.ஐ., எனப்படும் மாணவர் அமைப்பினர் கவர்னர் கார் முன் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
இதில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் அத்துமீறலை அங்கிருந்த சில மாணவர்கள், டி.வி. கேமிரா மேன்கள் வீடியோ எடுத்தனர். வீடியோ எடுத்த மாணவர்களை போலீசார் தாக்கினர். இந்த பரபரப்பு வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement