Triumph Daytona 660 Teaser – ஜனவரி 9.., டிரையம்ப் டேடோனா 660 விற்பனைக்கு அறிமுகம்


Triumph-Daytona-660-Teaser

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையில் சூப்பர் ஸ்போர்ட் ஃபேரிங் ரக டேடோனா 660 பைக்கினை விற்பனைக்கு ஜனவரி 9, 2024ல் வெளியிட்ட உள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன் லைன் மூன்று சிலிண்டர் 660cc  என்ஜினை பெற உள்ள டேடோனா 660 இந்திய சந்தையில் விற்பனைக்கு ரூ.8.50-10 லட்சத்துக்குள் வெளியிடப்படலாம்.

Triumph Daytona 660

விற்பனையில் உள்ள டிரைடன்ட் 660 பைக்கின் அடிப்படையில் ஃபேரிங் ஸ்டைலை பெற்றதாக வரவிருக்கின்ற டேடோனா 660 மாடல் என்ஜின், ஃபிரேம் உட்பட பல்வேறு முக்கிய பாகங்களை பகிர்ந்து கொண்டு இரண்டு பிரிவு பெற்ற எல்இடி ஹெட்லைட் பெறுகின்றது.

இன்லைன் மூன்று சிலிண்டர் பெற்ற 660cc என்ஜின் அதிகபட்சமாக  10,250 RPM-ல் 81hp பவர் மற்றும்  6,250 RPM-ல் 64Nm டார்க் வெளிப்படுத்தலாம். 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் மிக நேர்த்தியான ஃபேரிங் பேனல் கொடுக்கப்பட்டுள்ள இரு பிரிவுகளை கொண்ட ஹெட்லைட் மூலம் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

டேடோனா 660 மாடலில் ஏற்கனவே சந்தையில் உள்ள டிரைடன்ட் 660, டைகர் ஸ்போர்ட் 660 ஆகிய இரண்டு பைக்குகளில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களை பகிர்ந்து கொள்வதுடன் ரைடிங் மோடு ( Rain, Road)பை டைரக்‌ஷனல் விரைவு ஷிஃப்டர் மற்றும்  இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.

ஸ்பிளிட் இருக்கையுடன் அப் சைடு டவுன் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள், மிச்செலின் ரோடு 5 டயர்களுடன் கூடிய அலாய் வீல், வட்ட வடிவிலான முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் முக்கிய கனெக்டேட் வசதிகள் என மற்றும் பல்வேறு வசதிகளை பெற்றிருக்கலாம்.

மேலும், டிரையம்ப் டேடோனா 660 பைக் பற்றி முழுமையான விபரம் ஜனவரி 9 ஆம் தேதி வெளயாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.