'ஈரப்பதம் காற்று மழை'யில் 3 பேரின் கதை

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கும் படம் 'ஈரப்பதம் காற்று மழை'. அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா இயக்குகிறார். வெற்றி, கிஷன் தாஸ், தீப்தி நடிக்கிறார்கள். படத்திற்கு ஸ்ரீராம் வெங்கடேஷ் இசையமைத்திருக்க, அமல் டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா கூறும்போது, “ மூன்று வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம். வழக்கமான கதை சொல்லும் முறை இந்தப் படத்தில் இருக்காது. இப்படம், மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சி விலகல்கள் ஆகியவற்றில் இந்தக் கதை கவனம் செலுத்துகிறது. இதன் பொருட்டு வரும் நிகழ்வுகள் படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். மேலும், வாழ்க்கை ஒருவர் மீது எந்த அளவுக்கு கொடூரமாகவும் அதேசமயம் எப்படி கனிவாகவும் இருக்கிறது என்ற வாழ்வின் நிலையற்ற தன்மையை இந்த படம் உணர்த்தும்.

இந்தப் படத்தில் நடிகர்கள் வெற்றி, கிஷன் தாஸ், தீப்தி ஆகிய மூவரும் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களையும் அவற்றின் ஆழமான உணர்ச்சிகளை புரிந்து கொண்டு திறமையாக நடித்துள்ளனர்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.