சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ஏ59 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. வரும் 25-ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு வர உள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ஏ59 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.56 இன்ச் டிஸ்பிளே
- ஸ்லிம் பாடி டிசைன்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- மீடியாடெக் டிமான்சிட்டி 6020 சிப்செட்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்கள்
- 5,000mAh பேட்டரி
- 33 வாட்ஸ் SUPERVOOC சார்ஜிங் சப்போர்ட்
- 13 + 2 மெகாபிக்சல் என இரண்டு கேமராக்கள் பின்பக்க இடம் பெற்றுள்ளது
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ள முன்பக்க கேமரா
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 5ஜி நெட்வொர்க், ட்யூயல் சிம் கார்ட்
- இந்த போனின் விலை ரூ.14,999
The moment you’ve been waiting for is here!
The OPPO A59 5G is starting at Rs.14,999, and the sale begins on December 25th.
Get ready to make this holiday season extra special!#OPPOA595G #ChristmasSale
Know More: https://t.co/YKSQyMtY5T pic.twitter.com/fsxJDrP2Eg
— OPPO India (@OPPOIndia) December 22, 2023