பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளராக பிரதீப் யசரத்ன நியமனம்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் இரண்டு பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நியமனங்கள் 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளராக திரு. பிரதீப் யசரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாண பிரதம செயலாளராக கடமையாற்றிய அவர் இலங்கை நிர்வாக சேவையின் (SLAS) விசேட தர அதிகாரியும் ஆவார்.
அவர் பல முக்கிய அரச நிறுவனங்களில் நிறைவேற்று நிலை பதவிகளை வகித்ததன் மூலம் இலங்கையின் நிர்வாக சேவையில் விசேட அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட ஏனைய செயலாளர்கள் –

திருமதி வசந்தா பெரேரா – செயலாளர், கல்வி அமைச்சு

திரு.எம்.என். ரணசிங்க – செயலாளர், நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு

திரு. குணதாச சமரசிங்க – செயலாளர், வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

திரு. ஏ.சீ மொஹமட் நஃபீல் – செயலாளர், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு

திரு சமன் தர்ஷன பண்டிகோரள – செயலாளர், நீர்ப்பாசன அமைச்சு

திரு. பி.கே.பி. சந்திரகீர்த்தி – செயலாளர், சுற்றாடல் அமைச்சு

கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன – செயலாளர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு

பொறியியலாளர். ரஞ்சித் ரூபசிங்க – செயலாளர், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு

கலாநிதி தர்மஸ்ரீ குமாரதுங்க – செயலாளர், தொழில்நுட்ப அமைச்சு

திரு.ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர – வடமத்திய மாகாண பிரதம செயலாளர்

செல்வி எஸ்.எல்.டீ.கே விஜயசிங்க – மேல் மாகாண பிரதம செயலாளர்

ஆகிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.