டில்லி நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலின் போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயந்து ஓடியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் கடந்த 13-ஆம் தேதி திடீரென நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். அவையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். […]
