
ஹனுமன் படத்தில் வரலட்சுமி ஆக்ஷன் அவதாரம்
உலகின் முதல் சூப்பர் மேன் என்று கொண்டாடப்படுகிறவர் ஹனுமான். ராமனின் தீவிர பக்தரான ஹனுமான் கடவுளாக வணங்கப்படுகிறார். இந்த கதையை நவீன காலத்துடன் இணைத்து உருவாகும் சூப்பர் ஹீரோ படம்தான் 'ஹனுமன்'. பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. புராணம், ஆன்மீகம், நவீனம் என எல்லாவற்றையும் கலந்து முழுநீள பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ளது.
தேஜா சஜ்ஜாவுக்கு அக்காவாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2 படங்களில் நடித்தது போன்ற வீரப் பெண்ணாக ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார். வினய் ராய் வில்லனாக நடித்துள்ளார். அமிர்தா அய்யர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். சமுத்திரகனி, கெட்டப் சீனு, வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜனவரி மாதம் 12ம் தேதி சங்கராந்தி தினத்தன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது