புதுடில்லி: மாநில தலைமை செயலர்களின் 3-வது தேசிய மாநாடு வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சியை வலுப்படுத்தும் விதிமாக மாநில தலைமை செயலாளர்கள் முதல் தேசிய மாநாடு கடந்த ஆண்டு ஜூனில் பஞ்சாப்பிலும், 2-வது மாநாடு கடந்த ஜனவரி மாதம் டில்லியிலும் நடைபெற்றது.
இந்த நிலையில் வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மூன்று நாள் தேசிய மாநாடு டில்லியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாடுகிறார்.
இதையொட்டி மாநிலங்ளின் அரசு தலைமை செயலாளர்கள், யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement