சென்னை: மத்திய நிதியமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு நடைபெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழ்நாட்டில் உள்ள வானிலை மையம் அதிநவீனமானது என்றவர், 5நாட்களுக்கு முன்பே வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தது என்று திமுக அரசின் குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்தார். இந்த வெள்ளப்பாதிப்பை மத்தியஅரசு பேரிடராக அறிவிக்காது என்றவர், மாநில அரசு வேண்டுமானால் பேரிடராக அறிவித்துக்கொள்ளலாம் என்று கூறினார். தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் பரவலாக மழை பெய்த வருகிறது. […]
