மூணாறு:சபரிமலைக்கு அழுதகடவு, முக்குழி வழியாக காட்டு பாதையில் பக்தர்கள் செல்லும் நேரத்தை அதிகரித்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இடுக்கி மாவட்டத்தின் எல்லையோரம் அமைந்துள்ள பெருவந்தானம் பகுதியில் இருந்து அழுதகடவு, முக்குழி வழியாக காட்டு வழியில் 11 கி.மீ. தூரம் நடந்து சபரிமலை சன்னிதானம் செல்லலாம். அழுதகடவு நுழைவு பகுதி வழியாக காலை 7:00 முதல் மதியம் 2:30 மணி வரையிலும், முக்குழி நுழைவு பகுதி வழியாக காலை 7:00 முதல் மதியம் 3:30 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த வழிகளில் பக்தர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அழுத கடவு வழியாக காலை 7:00 முதல் மாலை 4:00 மணி வரையிலும், முக்குழி வழியாக காலை 7:00 முதல் மாலை 4:30 மணி வரையிலும் நேரத்தை அதிகரித்து இடுக்கி மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement