வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு :புதுடில்லியில் இருந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் சொகுசு விமானத்தில், பெங்களூரு வந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வராக சித்தராமையா உள்ளார். இவர் பல்வேறு விஷயங்களுக்காக நான்கு நாள் பயணமாக, வெவ்வேறு துறை அமைச்சர்களுடன் புதுடில்லி சென்றிருந்தார். பெங்களூரில் இருந்து டில்லிக்கு, சாதாரண பயணியர் விமானத்தில் சென்றனர்.பயணத்தை முடித்து கொண்டு, சிறப்பு விமானத்தில், பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வந்தனர். .
அவர்கள் வந்தது சொகுசு விமானம். விமானத்தில் அமைச்சர் ஜமீர், ஹாயாக நடந்து வருவது, சோபாவில் அமர்வது, ஸ்டைலாக நடப்பது, முதல்வர், அமைச்சர்களுடன் அமர்ந்து போஸ் கொடுப்பது போன்ற வீடியோ மற்றும், ‘செல்பி’ எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை, அவரது ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது, சமூக வலைதளங்களில்வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பியது. ‘நால்வருக்கு தனி சொகுசு விமானமா, மக்கள் வரி பணம் விரயமாக்கப்படுகிறது’ என்று பலரும் கேள்வி பதிவு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement