அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம். மன்னன் ஒருவன் தனக்கு ஏற்பட்ட தோட நிவர்த்திக்காக, தல யாத்திரை சென்றான். வழியில் அவனைச் சந்தித்த அந்தணர் ஒருவர், காயத்ரி மந்திரத்தால் அவர் பெற்ற புண்ணியத்தை மன்னனுக்குக் கொடுத்தார். இதனால் மன்னனின் தோடம் நீங்கியது. மகிழ்ந்த மன்னன், அந்தணருக்குப் பொருள் கொடுத்தான். அதை வாங்க மறுத்தவர், காயத்ரிக்குக் கோயில் கட்டும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி மன்னன் இங்கு காயத்ரியை மூலவராக வைத்து தனிக்கோயில் கட்டினான். சிவனுக்குரிய நந்தியை இவளது சன்னதிக்குள் பிரதிட்டை […]
