உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கிய 41 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு தங்களுக்கு வழங்கிய காசோலையை ஏற்க மறுத்துள்ளனர். சில்க்யரா பகுதியில் உள்ள மலையைக் குடைந்து 4.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு வந்த சுரங்கவழி பாதையில் கடந்த நவம்பர் மாதம் 12 ம் தேதி அதிகாலை ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சுரங்கப்பாதை உள்வாங்கியது. இந்த விபத்தின்போது அங்கு பணியாற்றிய 41 […]
