சர்வதேச மீனவர்கள் தினத்தை முன்னிட்டு, கடற்றொழில் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் 09 மாகாணங்களையும் உள்ளடக்கிய மீனவர் தின ஓவியங்கள் 2023 என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் சித்திரப் போட்டி நடாத்தப்பட்டதுடன், நேற்று (22) கடற்றொழில் அமைச்சில், சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தலைமையில் இடம்பெற்றது.
இப்போட்டிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சித்திரங்கள்; சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், நுண்கலை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் கொண்ட குழு வெற்றியாளர்களை தெரிவு செய்தது.
இங்கு மூன்று பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து பாராட்டி பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, இந்த மாணவர்கள்; ஒவ்வொருவரும் மிகவும் திறமையானவர்கள் எனவும், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரினதும் ஒன்றிணைந்த அணுகுமுறையினால் இந்த வேலைத்திட்டம் வெற்றியீட்டியதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி அனுஷா கோகுல உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.