552 அசோக் லேலண்ட் பேருந்துகளை வாங்கும் டிஎன்எஸ்டிசி

இந்தியாவின் முன்னணி பேருந்து தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனத்திடமிருந்து 552 தாழ் தள பேருந்தை வாங்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த பேருந்துகளை வாங்குவதற்கு ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KfW) நிதியளிக்கிறது.

மிக இலகுவாக பேருந்துகளில் ஏறி இறங்கும் வகையில் நகர்புற பயன்பாடுக்கு ஏற்ற வகையில் Ultra-Low Entry (ULE) வகையில் உள்ள பேருந்தாகும்.

Ashok LeyLand

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திடம் தற்பொழுது வரை அசோக் லேலண்ட் நிறுவனத்திடமிருந்து 18,477 பேருந்துகளை வாங்கியுள்ளது. மேலும் 552 பேருந்துகள் சேர்க்கப்பட உள்ளது.

புதிய லேலண்ட் ULE பேருந்துகளில் சக்திவாய்ந்த H-சீரிஸ் ஆறு-சிலிண்டர் நான்கு-வால்வு 184 kW (246 hp) என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். படிகள் இல்லாத நுழைவு, பின்புறத்தில் என்ஜின் அமைவு, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், முன் டிஸ்க் பிரேக், எலக்ட்ரானிக் மூலம் கட்டுப்படுத்தப்படும் முன் மற்றும் பின்புற ஏர் சஸ்பென்ஷன் மற்றும் ஒரு நுண்ணறிவு. சிசிடிவி பாதுகாப்பு , வாகனத்தின் இருப்பிடத்தை பிரதிபலிக்கும் இலக்கு பலகைகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவை உள்ளன. வரும் ஏப்ரல் 2024 முதல் டெலிவரி துவங்க உள்ளது.

அசோக் லேலண்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷேனு அகர்வால் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் பொது போக்குவரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மிகவும் திறன் மிகுந்த தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகளை உருவாக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.